பிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்


குழந்தை பெற்ற பிறகு மரணத்தின் விளிம்புவரை சென்று வந்ததாக டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது மகள் ஒலிம்பியாவுடன் வோக் இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு உடலில் ரத்தக் கட்டிகள் உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் எந்தப் பிரச்னையும் இல்லை என மருத்துவர்கள் கருதியதாகவும் பின்னர் உடல்நிலை மோசமானதால் சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் செரீனா கூறியுள்ளார்.

தனது வேண்கோளின்படி சி.டி.ஸ்கேன் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பிரசவத்துக்குப் பிறகு கறுப்பினப் பெண்களின் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS