குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரன் : நடுங்க செய்த வீடியோ !


மதுபோதையில் இருக்கும் தந்தை ஒருவர் தனது குழந்தையை ஆட்டோ தூக்கி அடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறின் போது மதுபோதையில் இருந்த கணவர், தனது குழந்தையை கோபத்தில் தூக்கிக்கொண்டு ஓடுகிறார். ஓடிய வேகத்தில் அங்கிருக்கும் ஒரு ஆட்டோவில் குழந்தை என்ற இரக்கம் கூட இல்லாமல், தூக்கி அடிக்கிறார். இதில் பலத்த காயமடைந்து அந்தக் குழந்தை கீழே விழுகிறது.

மீண்டும் அதை தூக்கிக்கொண்டு திரிகிறார். அந்த நபரை, அவரது மனைவி மற்றும் சுற்றி நிற்கும் உறவினர்கள் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கொடூரனை கடுமையாக கண்டித்து வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS