ஸ்கேட்டிங் விளையாட்டில் அசத்தும் மாமல்லபுரம் சிறுமி! வைரல் வீடியோ


மாமல்லபுரம் மீனவர் ஒருவரின் 12 வயது மகளின் ஸ்கேட்டிங் வீடியோ சமுகவளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வசித்து வரும் மீனவர் சடையப்பன். இவருக்கு 12 வயதில் கமலி என்ற மகள் இருக்கிறார். ஜந்தாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி, ஸ்கேட்டிங்க் விளையாடுவதில் வல்லவர்.

இவருக்காக மீனவர்கள் தங்களுடைய வலைகளை காய வைக்கும் இடத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு தளம் ஒன்றை அமைத்துள்ளனர். தற்போது அப்பகுதி சிறார்கள் அதில் தினமும் விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மீனவரின் மகள் சிறுமி கமலி ஸ்கேட்டிங் விளையாடும் வீடியோ முகவளைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS