பட்டப்பகலில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் கொள்ளை


திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி
எலிசபெத் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காலையில் வெளியே சென்று விட்ட நிலையில், மதியம்
வீடு திரும்பிய ஜான் பீட்டர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 4 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது
தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS