விநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து


விநாயகர்‌ சதுர்த்தி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‌துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் தலையீடுகள், மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
 
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேர்மறை எண்ணங்கள் உருவாக விநாயகரை வழிபடுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இல்லமெல்லாம் இன்பம் பெருகிட, தடைகள் விலகி நல்வாழ்வு மலர்ந்திட, மகிழ்ச்சி என்றும் நிலைத்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS