விவசாய விழிப்புணர்வு : புதுமண தம்பதியின் அசத்தல் பயணம்


கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கியில் மாட்டு வண்டியில் திருமண கோலத்தில் புதுமண தம்பதியர் பயணம் செய்து அசத்தியுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் கவி அரவிந்த். பொறியியல் பட்டதாரியான இவர், தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் சைபன்புதூர் வாயாடிகாட்டுத் தோட்டத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான பிரவீணா என்பவருக்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 

மணமகன் கவி அரவிந்த் தனது திருமணத்திற்கு சொந்தங்களும் நண்பர்களும் மாட்டுவண்டிகளில் தான் வரவேண்டும் என அன்பு கட்டளையிட்டார். வித்தியாசமான கோரிக்கையை ஏற்ற அனைவரும் மாட்டுவண்டியில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தனது குதிரை வண்டியை மணமகன் கவி அரவிந்த் ஓட்டிவர மணமகள் பிரவீணா அருகில் அமர்ந்து சென்றார். திருமணத்தில் சீதனமாக நாட்டு மாடுகள் பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டன.

POST COMMENTS VIEW COMMENTS