சம்பள பாக்கியை கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலா பதிலளிக்க உத்தரவு


சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்துக்கான சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ,
தயாரிப்பாளர் மனோபாலா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ‌உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அரவிந்த்சாமி மற்றும் திரிஷா நடிப்பில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இந்த
படத்துக்காக பேசிய சம்பளத்தில் தனக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை ஆண்டுக்கு 18 சதவீத
வட்டியுடன் வழங்க தயாரிப்பாளருக்கு உத்தரவிடக் கோரியும் நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Read Also -> அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு 

Read Also -> தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..? தற்கொலையா..?  

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு மீது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர்
மனோபாலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

POST COMMENTS VIEW COMMENTS