அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்‌.ஏவுக்கு இன்று நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த மணப்பெண் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் தோழி வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த மணப்பெண், தன்னைவிட 20 வயது மூத்தவரான எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்ததால் தோழியின் வீட்டிற்குச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அந்த பெண்ணிற்கு விருப்பமில்லாததால், குறித்த தேதியில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த உறவினர் பெண்ணுடன் இன்று நடைபெற இருந்த திருமணமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஈஸ்வரனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாலேயே திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS