உலகின் 2வது பெரிய சரக்கு விமானம் சென்னை வருகை


உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான ரஷ்யாவின் ஆன்டோனோவ் ஏ.என்-124 விமானம் சென்னை வந்துள்ளது. 

ரஷ்யாவைச் சேர்ந்த வோல்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் 53 டன் சரக்குடன் சென்னையில் தரை இறங்கியது. இந்த விமானம் 69 மீட்டர் நீளமும், இறக்கைகள் இரு புறமும் சேர்த்து 73 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரம்மாண்ட உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள், தொழிற்சாலைக் கருவிகளைக் கொண்டு செல்ல இந்த விமானம் ஏற்றது. அதிகபட்சம் 150 டன் சரக்குகளை இதில் கொண்டு செல்ல முடியும். 1982ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை AN-124 ரக விமானங்கள் 55 இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறையாகும்.

POST COMMENTS VIEW COMMENTS