தலைமைக் காவலர் வீட்டில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி


திருவள்ளூரில் தலைமைக் காவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலராக இருப்பவர் ரவீந்திரன். இவர் திருவள்ளூர் அடுத்த திருவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட, அவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு ரவீந்திரன் அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, டிவி மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்ததுள்ளது. 

இதுகுறித்து ரவீந்திரன் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு தலைமைக் காவலர் வீட்டிலேயே நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS