அதிமுகவின் இமாலய சாதனைக்கு மக்கள் வரவேற்பு - அமைச்சர்


ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு முன் விடுதலை வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சார சைக்கிள் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து பார்வையிட வந்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில்  பேட்டியளித்தார்...

Read Also -> அனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..! 

அப்போது “ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரரிவாலன் உள்ளிட்ட 7 பேருக்கு முன் விடுதலை வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக தெரிவித்தார். 7 பேரின் முன் விடுதலை தீர்மானம் அ.தி.மு.க ஆட்சியின் இமாலய சாதனையாக மக்களிடையே வரவேற்கப்படுகிறது. ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு முன் விடுதலை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் 7 பேரும் மனரீதியான விடுதலையை பெற்றுள்ளனர். 7 பேர் விடுதலை தீர்மான கடிதத்தை ஆளுநர் நிராகரித்தால் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் என பதிலளித்தார்

Read Also -> கல்வியை மேம்படுத்த புதிய திட்டம்.. ஜக்கி வாசுதேவ் தகவல்

பெட்ரோல் டீசல் விலை உயரக்கூடாது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாகவும் இந்திய அளவில் வளர்சி பெற்ற மாநிலங்களில்  தமிழகம் 2வது இடத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

Read Also -> சுத்தியால் பின்னந்தலையில் அடித்து பெண் படுகொலை.. சென்னையில் கொடூரம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் 43 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க தான் வெற்றி பெரும்.திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு வங்கி உள்ள தொகுதியாக விளங்குகிறது. வாக்கு வங்கியை கலைக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபடுகிறது. அ.தி.முகவின் முகவரியாக உள்ள இரட்டை இலை சின்னம்தான் எங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என தெரிவித்தார்

POST COMMENTS VIEW COMMENTS