அனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..!


அனாதையாக கிடந்த 60 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை ரயில்வே போலீசார் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் கைபை கேட்பாரற்று கிடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் நபர் ஒருவர் நேற்று தகவல் கொடுத்தார். உடனே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தமிழக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைபையை மீட்டனர்.

Read Also -> கல்வியை மேம்படுத்த புதிய திட்டம்.. ஜக்கி வாசுதேவ் தகவல்

Read Also -> பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

அதனுள் 60 சவரன் தங்க நகைகள், செல்போன், ரூ.2,500, ஏடிஎம் ஆகியவை இருந்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பை, தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபவேல்ராஜ் என்பவரின் பை என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் உரிய விசாரணைக்கு பிறகு அவரிடம் பையை ஒப்படைத்தனர். நகையை மீட்டு கொடுத்ததால் ரயில்வே போலீசாருக்கு அவர் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS