கல்வியை மேம்படுத்த புதிய திட்டம்.. ஜக்கி வாசுதேவ் தகவல்


நாடு முழுவதும் கல்வித்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜக்கி வாசுதேவ், “ இப்போது நினைத்தவுடன் யாருக்கும் நம்மால் போன் செய்ய முடிகிறது. இந்த மாதிரி வசதி கிடைக்கும் போது அதனை நல்ல வழியில் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு பலருக்கு மொபைல் போன் என்பது அவர்களின் மூளையைவிட முக்கியமானது ஆகிவிட்டது.

Read Also -> சுத்தியால் பின்னந்தலையில் அடித்து பெண் படுகொலை.. சென்னையில் கொடூரம் 

இந்த மாதிரி சூழ்நிலைக்கு மொபைல் போனும், தொழில்நுட்பமும் காரணம் அல்ல. நம்மிடம் உள்ள விழிப்புணர்வு குறைந்ததே காரணம். வாழ்க்கையை விழிப்புணர்வாக நடத்தினால்தான் மொபைல் போனையும் நமது நன்மைக்கு தேவையான மாதிரி விழிப்புணர்வுடன் பயன்படுத்த முடியும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ கல்வி சுமையால் மாணவர்களிடம் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலையை தடுக்க முடியாது. பள்ளியில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும். நாடு முழுவதும் கல்வித்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.” என தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS