13 மணி நேரம், 13 வயசு சிறுவன் ஓவியம் வரைந்து அசத்தல் !


4 முதல் 5 நிமிடத்திற்குள் ஓவியம் வரைந்து அசத்தும் சிறுவனின் சாதனை “யுனிக்கிவ் உலக சாதனை”க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மால் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் 13 வயது சிறுவன் பார்கவ் வாசு தொடர்ந்து 13 மணி நேரம்‌ ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். பார்கவ் வாசு 13 மணிநேரத்தில் 150 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை 4 முதல் 5 நிமிடத்திற்குள் கருப்பு பேனாவை பயன்படுத்தி கொண்டு அவர்களது முகங்களை ‌ஓவியங்களாக வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு நேற்று காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 10 வரை நடைபெற்றது. 

கருப்பு பேனாவை கொண்டு ஒருநாள் முழுவதும் 160-க்கும் மேற்பட்டோரின் முகங்களை ‌ஓவியங்களாக வரையப்பட்டன. வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் 80 சதவிதத்திற்க்கும் மேலாக ஒத்துபோகும் வகையில் வரைந்துள்ளதாக ஓவிய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 13 வயது சிறுவன் பார்கவ் வாசு மிகவும் திறன் படைத்தவர் என்றும் இந்நிகழ்வில் 10 மணி நேரம் 32 நிமிடங்கள் வரை எந்த ஒரு இடைவேளை இன்றி (இயற்க்கை உபாதை உட்பட) ஓவியங்களை வரைந்ததாக கூறுகின்றனர்.

சிறுவன் பார்கவ் வாசு 3 வயது முதல் ஓவியங்களை வரைந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இம்மாதிரியான சாதனைகளை அங்கிகரிக்கும் அமைப்பான “யுனிக்கிவ்”-க்கு பார்கவ்வாசுவின் சாதனை பரிந்துரைக்கப்பட்டுள்ள‌‌து. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களை சிறுவன் ஓவியங்களாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். ஓவியங்களை வரைந்த பார்கவ் வாசுவின் ஆசிரியர் சிவராமன் மிக நுன்னிய எழுத்துக்களால் எழுதி வரையும் “அனிமா” ஓவியங்களை வரையும் சிறப்பு மிக்க ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS