தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்


தன்பாலின உறவுவுக்கு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து கிருஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்ற வளாத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தன்பாலின உறவுவுக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில், அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் தன்பாலின உறவுவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால், ஒட்டுமொத்த தன்பாலின உறவுவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும், இயற்கைக்கு முரணான தீர்ப்பு எனக்கூறி கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து  முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பந்தைய சாலை காவல்துறையினர் மத போதகரை கைது செய்து அழைத்து சென்றனர். கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் முழக்கங்கள் எழுப்பியபோது, சேம்பரில் நீதிபதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS