லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் சாதனை


லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். தாம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் நவின்குமார் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். படுத்த நிலையில் சறுக்கிச்செல்லும் லிம்போ ஸ்கேட்டிங்கில் 10 மீட்டர் தொலைவு மற்றும் 9.5 இன்ச் உயரத்தை 1.85 வினாடியில் கடந்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைகளை படைத்துள்ளார். முன்னதாக துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை 4.12 வினாடியில் நிகழ்த்தியிருந்தார். அந்த சாதனையை இந்தியாவை சேர்ந்த ரோகன் என்பவர் சமன் செய்தார். இந்நிலையில் நவின் குமார் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Read Also -> 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!  

POST COMMENTS VIEW COMMENTS