ரயிலில் ஒரு உணவகம் !


சென்னை ஐ.சி.எஃப்., அருங்காட்சியகத்தில் செயல்பட்டு வரும் ரயில் போன்ற வடிவமைப்பு கொண்ட உணவகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில் போன்ற தோற்றத்துடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம். இந்திய சுற்றுலா மற்றும் உணவுக்கழகம் நடத்தி வரும் இந்த உணவகம், இந்தியாவின் 2ஆவது ரயில் உணவகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குளிர் சாதன வசதியுடன் ஒரே நேரத்தில் 64 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வசதியுடன் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read Also -> லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் சாதனை

Read Also -> பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி ?

திங்கள்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம். உணவகத்தின் உள்ளே நவீன வசதிகள் இருப்பதால் சிறப்பான அனுபவம் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மக்களுக்கு ஏற்ற விலையிலும், சுவையாகவும் உணவுகள் கிடைப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிக அளவில் வந்து செல்வதாக உணவக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS