நூதன முறையில் புதிய கார்கள் திருட்டு : இருவர் கைது


காஞ்சிபுரத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து நூதன முறையில் இரண்டு புதிய கார்களை திருடிய தொழிலாளர்கள் சிக்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலையில் இரண்டு புதிய கார்கள் காணாமல் போனது குறித்து, புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்நிறுவனத்தில் வாகன தளவாடங்கள் பிரிவில் பணிபுரியும் மாரிமுத்து, அருண்குமார் ஆகியோர் கார் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 

அவர்களை கைது செய்த காவல்துறையினர் இரண்டு புதிய கார்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிமுத்து தான் பயன்படுத்தி வந்த பழைய காரின் பதிவு எண்ணெய் புதிய காருக்கு இணைத்து நிறுவனத்திற்கு வெளியே காரை கடத்தியுள்ளார். ஒரு காரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில், மற்றொரு காரை அருண்குமாருக்கு 6 லட்சத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS