தமிழகத்தில் 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை


தமிழகத்தில் அடுத்த இரண்டு தி‌னங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ‌கூறப்பட்டுள்ளது. நாளை மறுதினமும் கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்‌களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS