ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது... ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கருத்து


ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயக‌ம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயக‌ம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ 161 சட்டப்பிரிவை பொறுத்தவரை ஒரு மனுவைப் பெற்று அதன்மீது ஆணை பிறப்பிக்க ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது. மாநில அரசு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். ஒப்புதல் அளிக்காமலும் இருக்கலாம். 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் ஆளுநரிடமே உள்ளது” என தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS