ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு முயற்சியா ? மு.க.ஸ்டாலின் கண்டனம்


மத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் “நீர் ஆய்வு” அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்வது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதனை மாநில அரசு வேடிக்கை பார்த்து விட்டு, இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு தலைமைச் செயலாளர் அறிக்கை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், தமிழக அரசு ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS