ராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்?


ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்களில்‌ அவற்றை குறிப்பிடுவது குறித்து உயர் கல்வி துறை பரிசீலித்து வருகிறது.

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் மாநில ராகிங் தடுப்புக் குழுவின் ஆலோசனைக் ‌கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவல்துறை இயக்குநர் டி.கே ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 

Read Also -> ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 ! 

         

Read Also -> ராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்? 

இந்தக் கூட்டத்தில் , மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் அவற்றை அவர்களின் மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடு‌வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் ராகிங்கை தடுப்பதற்கான குழுக்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கல்லூரிகள் ராகிங்கை தடுப்பதற்கான குழுக்களை அமைத்து அது தொடர்பான அறிக்கையை, மாநில அளவிலான கண்காணிப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS