வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்


தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 

சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. 

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லையென்றாலோ, தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தாலோ, சிறப்பு முகாமை பயன்படுத்தி அவற்றை சரிசெய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் இன்றும், இம்மாதம் 23ஆம் தேதியும் நடைபெறுகின்றன. பெயர் நீக்க மற்றும் சேர்ப்பதற்கான படிவங்கள் முகாம்களில் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் விவரங்கள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

Read Also -> ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்

POST COMMENTS VIEW COMMENTS