செப்.,30 வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்: தமிழக அரசு


தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளி‌டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததால் பிரதமர் மோடி மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து முதல்வரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. எனவே, இதன் மூலம் தமிழக விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS