’பிக்பாஸ் 2’ செட்டில் ஏசி மெக்கானிக் உயிரிழப்பு


’பிக்பாஸ் 2’  அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஏசி மெக்கானிக் உயிரிழந்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் ’பிக்பாஸ் 2 ’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டம் மத்தூரை சேர்ந்த  குணசேகரன் இந்த நிகழ்ச்சியில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2 வது மாடியில் தங்கியுள்ளார். நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள இரண்டாவது மாடியில் அறையின் இருந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில் குணசேகரன் நண்பர்களுடன் நேற்று சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் கைகழுவும் போது தவறி கீழே விழுந்ததில் உயிழந்தார் என்று  கூறப்படுகின்றது.

POST COMMENTS VIEW COMMENTS