திருச்செந்தூர் கோயில் கடைகள் : ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு


திருச்செந்தூர் முருகன் கோவில் வெளி வளாகப்பகுதி கடைகளை முறையாக பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை‌க் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்செந்தூர் முருகன் கோவில் வெளி வளாகப் பகுதியில் ஏலம் எடுக்காமல் சிலர் நிரந்தரமாக கடைகளை ஆக்கிரமித்து உள்ளனர் ‌என்றும், முறையாக பொது ஏலம் நடத்தி கடைகளை குத்தகைக்கு விட உத்தரவிட வேண்டும் என்று குறி‌ப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் முருகன் கோவில் வெளி வளாக கடைகளை முறையாக பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Read Also -> ஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது

POST COMMENTS VIEW COMMENTS