“சாலை வரி வசூலிக்கப்படுவதில்லை” - போக்குவரத்து செயலர் அதிர்ச்சி


சாலை வரி குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியதற்கு முரணான தகவல்‌களை போக்குவரத்து செயலர் இரா.பிரபாவதி அளித்துள்ளார்.

‌சமூக ஆர்வலரான தேனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், ‌2010ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட சாலை வரி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு 27 ஆயிரத்து 750 கோடியே 10 லட்ச ரூபாய் என போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைத்தது.

மேலும் வசூலிக்‌கப்படும் பணம் எதற்கு பயன்படுத்தப்பட்டது என ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். அதற்கு தலைமைச் செயலகத்தில் கேட்குமாறு பதில் வந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் போக்குவரத்து செயலர் அலுவலகத்தில் ஆர்டிஐ செய்து கேட்ட‌தற்கு, அது போன்ற ஒரு வரியே வசூலிக்கப்படுவதில்லை என்று பதில் அளித்துள்ளனர். 

வரி வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையம் பதில் அளித்துள்ள நிலையில் போக்குவரத்து செயலர் இரா.பிரபாவதி “சாலை வரி வசூலிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். இவரது பேச்சு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS