கருவுடன் சேர்ந்து வளரும் கட்டி: உதவிக்கு காத்திருக்கும் கர்ப்பிணி பெண்


கருவுடன் சேர்ந்து வளரும் சதைகட்டியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உதவி வேண்டு போராடி வருகிறார். 

திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடையும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. அப்படி காத்திருந்து கருவுற்ற பெண்தான் ஷர்மிளா. சேலம் எருமாபாளையம் பகுதியில் வசித்து வரும் ஷர்மிளாவுக்கும் அதே பகுதியை சதீஷ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷர்மிளா கருவுற்ற மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்த வேளையில் திடீர் அதிர்ச்சி காத்திருந்தது. ஷர்மிளாவின் கர்ப்பபையில் கருவுடன் சேர்ந்து ஒரு சதைக்கட்டியும் வளர்வது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 

அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு அலைந்தும் ஷர்மிளாவின் பிரச்னைக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே செய்வதறியாது திகைத்து நின்றனர் அவரது குடும்பத்தினர். ஒருசில தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வாய்ப்புள்ளதாகவும், இதற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் செலவாக கூடும் என்றும் கூறியுள்ளனர்.

பெற்ற தந்தையும், கட்டிய கணவரும் நெசவு பட்டறைகளில் கூலி வேலை செய்து வருவதால் அந்தத் தொகையை எற்பாடு செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். ஆகவே அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அல்லது தனி நபர்கள் யாரேனும் உதவு வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல்கள் : மோகன்ராஜ் - செய்தியாளர்,சேலம்.

POST COMMENTS VIEW COMMENTS