சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்!


சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை அங்குள்ள ஊழியர்களே 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

Read Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா

Read Also -> குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது

இந்த பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆபரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி மற்றும் தோட்ட வேலை செய்யும் குணசேகர் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS