டாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தியுள்ளார் விழுப்புரம் அரசு பள்ளி மாணவன் ஸ்ரீகாந்த். 

பள்ளியந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீகாந்த். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை ஒவியமாக வரைந்துள்ளார். ஆசிரியர் தினத்திற்காக தாம் இந்த ஓவியத்தை வரைந்ததாக தெரிவித்த மாணவர், காந்தி, காமராஜ், நேரு போன்றவர்களின் உருவத்தையும் தலைகீழாக வரைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் பள்ளியந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி கொண்டாட்டத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீகாந்த் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து சாதனை படைத்துள்ளார். இயல்பாக ஓவியத்தில் நாட்டம் உள்ள ஸ்ரீகாந்த் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார்.

மேலும் ஸ்ரீகாந்த் கூறுகையில் தேச தலைவர்கள் காந்தி காமராஜர் நேரு போன்றவர்களின் படங்களையும் தான் நேராகவும், தலைகீழாகவும் வரையும் திறன் கொண்டதாக தெரிவிக்கின்றார். இது போன்ற கூடுதல் திறனுக்கு தனது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் ஆகியோர் தனக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் இது போன்ற மாணவர்களின் திறமை பாராட்டத்தக்கது.

தகவல்கள்: பா.ஜோதி நரசிம்மன்,செய்தியாளர் - விழுப்புரம்.

POST COMMENTS VIEW COMMENTS