எடப்பாடி மீதான பு‌காரில் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்


முதலமைச்சர் எடப்பாடி ப‌ழனிசாமி மீது திமுக அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உ‌யர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்‌ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி‌ , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த ஜூன்‌ 18ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த மனு மீது தமி‌ழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூன் 22-ஆம் தேதி விசாரணை தொடங்கிய டி.எஸ்.பி., அது தொடர்பான வரைவு அறிக்கையை இயக்குநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும் கூறி பதில் மனுவை தாக்கல் செய்தார். பதில் மனு மீது விளக்கமளிக்க திமுக தரப்பு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS