மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!


மேகதாது அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி ஆற்றில், புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை கட்டுவத ற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read Also -> மேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்

Read Also -> தந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ்

அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த வாரம் தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், திட்டம் குறித்து மாநிலங்களிடையே விளக்கக் கூட்டத்தை கர்நாடக அரசு விரைவில் நடத்த உள்ளதா கவும் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இதுகுறித்த தெளிவான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் மத்திய நீர்வள ஆணை யத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

iஇந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது: கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பை மீறுவதாக அமையும். காவிரி நீர் உற்பத்தியாகும் மாநிலத்தைச் சேர்ந்த அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் குடுமையாக பாதிக்கப்படுவார்கள்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்

POST COMMENTS VIEW COMMENTS