பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன?


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் டேனியல் திருமணம் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் இருந்து நேற்று டேனியல் வெளியேற்றப்பட்டார். நேற்று அவர் வெளியேறிய நிலையில், இன்றே அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்தை அவர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் செய்துள்ளார். அத்துடன் தனது மனைவியுடன் மாலை அணிவித்தபடி எடுத்திருந்த புகைப்படத்தை, டேனி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள், டேனி திருமணத்திற்காகத்தான் பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார். இது அவராக எடுத்த முடிவுதான், அவர்களா வெளியேற்றவில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டேனிக்கு காதலில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் இந்த அவசர முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS