அண்ணா பல்கலை., பேராசிரியர் பதவி உயர்வுக்கு புதிய விதிகள்?


அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பதவி உயர்வில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று கூடும் நிலையில் அதற்கான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பதவி உயர்வு பெற வேண்டுமெனில் குறைந்தது ஒரு பி.எச்டி மாணவருக்கு கைடாக பணியாற்றிருக்க வேண்டும், ஆராய்ச்சி படிப்புகள் சார்ந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்க வேண்டும் உள்ளிட்ட புதிய விதுமுறைகளை கொண்டுவர உள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Also -> வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம்

Read Also -> காலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..!  

இந்த விதிமுறைகளை அமல்படுத்தலாமா என்பது குறித்த முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. மறுமதிப்பீடு முறைகேடு விவகாரங்களுக்கு இடையில் கூடும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. உயர்கல்வித் துறை செயலாளர் ராம் மங்கத் சர்மா பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆட்சிமன்றக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS