ஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்


நிர்வாக காரணங்களுக்காக மாநகர பேருந்துகளில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பயண அட்டை திட்டத்தை தொடர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனவரி முதல் பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, 50 ரூபாய்க்கான ஒரு நாள் பயண அட்டை மற்றும் மாதாந்திர பயண அட்டை நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. 50 ரூபாய்க்கான ஒரு நாள் பயணச்சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

ஆனால் நிர்வாக காரணத்தாலும், ஒரு நாள் பயணச்சீட்டை ஒருவர் வாங்கி பலர் பயன்படுத்து‌வதாலும், அதனை தற்போது வழங்கத் திட்டம் இல்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள்‌ தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் இவை குறித்து எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

POST COMMENTS VIEW COMMENTS