“நெல் கொள்முதல் நிலையங்களை மூடாதீர்” - முத்தரசன்


நேரடி கொள்முதல் நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு, தமிழக அரசு அதனை ஏற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை மூடி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது எனக் கூறியுள்ளார். 

அரசின் இந்த நடவடிக்கையால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலை விவசாயிகளுக்கு கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளார். அரசின் முடிவை திரும்ப பெற்று அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும் அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் கேட்டுக் கொள்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS