ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தலா ரூ30 லட்சம் - தமிழக அரசு


ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் மூவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.

மகளிருக்கான குழுப் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் , வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் தனித்தனியே வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள அவர், தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வரும் காலத்திலும் வெற்றிகளைக் குவிக்க தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS