மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்


மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

அண்மைக் காலமாக விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது தவிர வெளிநாடுகளுக்குச் சென்றும் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று
வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

இரவில் ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் குறைவு காரணமாக அவர்க்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடல்நிலை சீரடைந்ததன் காரணமாக, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையின் தொடர் முன்னேற்றம் காரணமாக விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

POST COMMENTS VIEW COMMENTS