‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்


சசிகலா சிறைக்கு சென்றதும் முதலமைச்சராக பதவியேற்க டிடிவி தினகரன் முயற்சித்ததாக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

காவிரியை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திவாகரன் ஊரில் இல்லாதபோது டிடிவி தினகரன் தன்னை மிரட்டி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைந்தபோது தன்னை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தியது திவாகரன் தான் என அவர் கூறினார். சசிகலா சிறைக்கு சென்றவுடன், முதலமைச்சராக பதவியேற்க டிடிவி தினகரன் திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்தார். 

POST COMMENTS VIEW COMMENTS