பெற்ற குழந்தைகளையே கொன்ற தாய் கைது


சென்னையை அடுத்த குன்றத்தூரில், பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். 

சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசித்து வரும் விஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி
அபிராமி. இவர்களுக்கு திருமணம் ஆகி அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். வெள்ளிக்கிழை இரவு விஜய் வீட்டிற்கு
வராமல் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். அதிகாலையில் வீட்டிற்கு வந்த விஜய், வீட்டின் கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டு
இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில்
இறந்து கிடந்ததைக் கண்டு விஜய் சத்தம் போட்டு கதறினார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து, விசாரணையைத் தொடங்கினர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும்
அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

அபிராமி தலைமறைவான நிலையில் குழந்தைகளுக்கு அவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தாரா? அல்லது வேறு
காரணம் உள்ளதா? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி
ஆணையர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அபிராமி
நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS