ஐ.ஜி மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை


ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகார்‌ சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை‌ செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது, மாவட்ட பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு‌‌, விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஏடிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, டிஜிபி அலுவலக மூத்த நிர்வாகி ரமேஷ் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் சரஸ்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்‌‌.

சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக்காப்பகத்தில் நடைபெற்ற இக்குழுவின் முதல் கூட்டத்தில், புகார்‌ தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை‌கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஐ.ஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 

POST COMMENTS VIEW COMMENTS