அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தாயும் மகனும் ‌உயிரிழப்பு


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தாயும் மகனும் உயிரிழந்தனர். இதனால் பணியில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்களை கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் வேலைக்காக வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவி சுமதியும், மகன் மணிகண்டனும் கறவை மாட்டை பிடித்து வர வயலுக்குச் சென்றிருக்கின்றனர். கரும்பு தோட்டம் வழியாகச் சென்ற அவர்கள் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் உடல்கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

காலையில் அவ்வழியாகச் சென்றவர்கள் , தாயும் மகனும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அறுந்துகிடந்த மின்கம்பியால் தான் தாயும் மகனும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்தக் காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS