ஆந்திராவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை !


ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே செம்மரக் கட்டைகளை கடத்தியதாக தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கொல்லபள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு செம்மரக்கட்டைகள் கடத்திக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற கடத்தல்காரர்கள் வனத்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், காமராஜ் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இதனிடையே அங்கு மேலும் தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also -> சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி!

POST COMMENTS VIEW COMMENTS