கஞ்சா கடத்தியபோது பாலத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்: சிசிடிவி காட்சி


சென்னையில் கஞ்சாவை கடத்திச்சென்றபோது இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளனர். வாகனத்தில் அதிவேகமாக வந்ததால் மேம்பால வளைவில் திரும்பும்போது அவர்கள் தடுப்புச் சுவரில் மோதினர். இதில் பின்னால் அமர்ந்து வந்த விஜய் என்பவர், பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிவந்த மதிவாணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த விஜய்யின் கைப்பையை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS