எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை... வேன் ஓட்டுநர் கைது


திருவள்ளூரில் எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளியின் வேன் ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் பால்பாண்டி என்பவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது 4 வயது எல்.கே.ஜி சிறுமிக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பால்பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Also -> ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

Read Also -> 23 வருடங்களாக சைக்கிளில் சென்று இலவசமாக பாடம் நடத்தும் அதிசய ஆசிரியர்  

சிறுமியை கண்காணிக்கத் தவறிய வகுப்பு ஆசிரியர், பள்ளித் தலைமை ஆசிரியர், ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS