பட்டாக்கத்தி சம்பவம்: மாநிலக் கல்லூரிக்கு அவப்பெயர் - சென்னை ஆணையர்


மாணவர்கள் தங்களின் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் சென்னை ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டார். அத்துடன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் பேருந்தில் பயணம் செய்ததால், ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். 

இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். படிக்கும் வயதில் மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என வலியுறுத்திய ஏ.கே. விஸ்வநாதன், எதிரிக்கும் அன்பு பாராட்டும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

POST COMMENTS VIEW COMMENTS