நீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின்


தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க மறுத்தது ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்த சலுகையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், நீ‌ட் தேர்வில் சி.பி.எஸ்.இ தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை செய்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள் என தமிழக மாணவர்கள் மீது சி.பி.எஸ்.இ குற்றம் சாட்டியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்த சி.பி.எஸ்.இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS