ரேணுகா தீக்குளிப்பு சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவுசென்னை அருகே திருவேற்காடு காவல்நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

புகார் ஒன்றின் விசாரணைக்காக திருவேற்காடு காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்ட ரேணுகா தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு காவல் ஆய்வாளர் அலெக்சாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதுடன், கைது செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததே ரேணுகாவின் தற்கொலைக்கு காரணம் எனப் புகார் எழுந்தது.

இதனையடுத்து அலெக்சாண்டர் மற்றும் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. புகாருக்குள்ளான காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் இருவாரங்களுக்குள் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS