பட்டா கத்தியுடன் பேருந்தில் பயணம் செய்த மாணவர் கைது


சென்னை வண்ணாரப்பேட்டை அருகே அரசுப் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை மிண்ட் மேம்பாலம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர், அரசுப் பேருந்தில் பட்டா கத்திகளுடன் பயணித்தனர். இதுகுறித்து வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்திய அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஆனந்தராஜ் என்பவரை கைது செய்தனர். காவல்துறை விசாரணைக்குப்பின் கைதான மாணவர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS