300 சவரன் நகை கொள்ளை - வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..!


ராமநாதபுரத்தில் 300 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டதாக உமா என்பவர் நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மனைவி உமா. இவரிடம் சகோதரியின் கணவரான, சினிமா பைனான்சியர் பூபதி ராஜா 300 சவரன் நகைகளை கொடுத்து வைத்திருந்தார். தனது மகனின் திருமணத்திற்காக பூபதி ராஜா நகைகளை கேட்டதை அடுத்து, கூட்டுறவு வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்த போது வழிப்பறி செய்யப்பட்டதாக உமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, உமாவிடம் இருந்து நகைகளை யாரும் வழிப்பறி
செய்யவில்லை என தெரியவந்தது. தனது அக்கா கணவரின் நகைகளை விற்றும், அடகு வைத்தும் செலவு செய்த உமா, அவற்றை திருப்பி கேட்டபோது வழிப்பறி செய்யப்பட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். 6 வருடங்களாக லாக்கரில் வைத்திருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக விற்று செலவு செய்ததை விசாரணையில் உமா ஒப்புக்கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS